Published on 28/09/2020 | Edited on 28/09/2020

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமலஹாசன் ஆந்திர முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ''எங்கள் சகோதரர் எஸ்.பி.பிக்கு பாரத ரத்னா விருது வழங்கு வேண்டும் என்பதற்காக நீங்கள் தேடும் மரியாதை நாடு முழுவதும் எதிரொலிக்கும்'' என அவர் ஆந்திர முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.