Skip to main content

என்னை கைது பண்ணட்டும் எனக்கு ஒன்றும் இல்லை ஆனால் கைது செய்தால்... -கமல்ஹாசன் பேட்டி

Published on 17/05/2019 | Edited on 17/05/2019

இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில்,

 

 

kamalhasan press meet in chennai airport

 

நான் சொன்னதில் தவறான கருத்துரை ஒன்றும் கிடையாது. பல வருடங்களாக சொல்லப்பட்டது ஆனால் இப்போது இது ஒரு காரணத்திற்காக கவனிக்கப்படுகிறது. இதே பரப்புரையை மெரினாவில் 15 நாட்களுக்கு முன்பு சொல்லியிருக்கிறேன்.  நாடாளுமன்ற இறுதி பரப்புரையில் மெரினாவில் இதே வார்த்தைகளை சொல்லியிருக்கிறேன் அப்போது  நம்பிக்கையுடன் இருந்தவர்கள் இப்போது நம்பிக்கை குறைந்தவுடன் விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். நான் எதையும் உருவாக்கவில்லை அவர்களாகவே உருவாக்கி விட்டிருக்கிறார்கள்.

 

மோடிக்கு நான் பதில் சொல்லவில்லை அவருக்கு சரித்திரம் பதில் சொல்லும். நான் கைதுக்கு பயப்படவில்லை பரப்புரை  இருக்கிறது அதை செய்ய ஆவல்தான். என்னை கைது பண்ணட்டும் எனக்கு ஒன்றும் இல்லை ஆனால் கைது செய்தால் இன்னும் பதற்றம்  அதிகரிக்கும் எனவே என்னயுடைய வேண்டுகோள் இல்லை அறிவுரை அதை செய்யாமல் இருப்பது நல்லது என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்