நடக்கவிருக்கின்ற 17 ஆவது நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் பிரச்சாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள நிலையில் பல்வேறு கட்சி தலைவர்கள் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சையில் சிவகங்கை பூங்கா அருகே மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்ற வேட்பாளர் சம்பத்ராமதாஸ், இடைத்தேர்தல் வேட்பாளர் துரைசாமியை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசுகையில்,
எப்படியாவது அரசியலில் சேர்ந்து சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோட இவர்கள் வரவில்லை இதுதான் இவர்களது தனித்துவம். மக்கள் நீதி மய்யத்தின் தனித்துவம் என்னவென்றால் இந்த தேர்தலை எப்படியாவது கடத்திவிட வேண்டும் அதற்காக என்ன வேண்டுமானலும் செய்யும் கட்சி அல்ல.
வழக்கமாக எந்த கட்சியின் வேட்பாளர்களையும் கும்பிட்டுக்கொண்டு இருக்க சொல்வார்கள். நடுவில் வேட்பாளர் எதாவது பேசினால் உஷ் என்று தலையில் தட்டிவிடுவார்கள். ஆனால் இந்த கட்சி அப்படியல்ல இன்று போல் என்று எங்கள் வேட்பாளர்கள் பேசுவார்கள் எனக்கூறினார்.