தமிழகத்தில் இரண்டு உச்ச நட்சத்திரங்களான ரஜினி கமல், அரசியலில் ஒருவர் இறங்க, மற்றொருவர் கட்டாயம் விரைவில் கட்சியை அறிவிப்பேன் 90% கட்டமைப்பு முடிந்துவிட்டது என இப்படி கமல், ரஜினி இருவருமே அரசியலில் கலந்து கட்டி அடித்தாலும் தங்களது கொள்கை என்ன என்று இதுவரை அறிவிக்காத நிலையில், ரஜினியோ "தன்னிடம் வந்து பத்திரிகையாளர்கள் உங்கள் கொள்கை என்ன என்று கேட்கிறார்கள் ''எனக்கு தலைசுற்றிடுச்சு'' என்று கூற தமிழகத்தில் அது கேலிப் பொருளாக பேசப்பட்டது.
இது இப்படியிருக்க மதுரையில் கிராம சபைக் கூட்டத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்து கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அடித்த போஸ்டர் அதிரடியாக அதிரவைக்கிறது, பெரியார் நடத்திய போராட்டம் குறித்து ரஜினி பேசியது சர்ச்சையானது. ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் நோக்கிலேயே பெரியாரை கையில் எடுத்திருக்கிறார் கமல் என்கின்றனர் அரசியல் வட்டாரங்களும், சமூக பார்வையளர்களும்.
காந்தி, பெரியார் படங்களோடு கமலை சேர்த்து "அய்யா பெரியாரின் வழியில் மனிதம் போற்றுவோம்'' அண்ணல் காந்தியடிகளின் கூற்றுப்படி கிராமங்களை தேற்றுவோம்" என்ற வாசகத்தோடு தங்கள் கொள்கையை வெளிக்காட்டிய மய்யத்தினர் (மேலிட தலைமையகத்தின் ஒப்புதலோடுதான் போஸ்டர் என்கின்றனர்).