Skip to main content

உள்ளாட்சி தேர்தலில் சுறுசுறுப்பு காட்டும் கமல்... 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Published on 20/01/2022 | Edited on 20/01/2022

 

ுப

 

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசும், மாநில தேர்தல் ஆணையமும் துரித கதியில் செய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட 11 மாநகராட்சிகள் இந்த முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 10 மாநகராட்சிகள் ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

 

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகள் அனைத்தும் நிறைவடையும் நிலையில் இருப்பதால் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வரும் 22ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் அதுதொடர்பான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் சில வாரங்களுக்கு முன்பே விருப்பமனு பெறப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் நகர்ப்புறத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலை வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று வாகை சூட என் வாழ்த்துகள்' என ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் இன்று மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்