Published on 21/06/2020 | Edited on 21/06/2020
பல வருடங்களுக்கு பிறகு கடந்த 12ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார். 16ந் தேதி கல்லனை திறக்கப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில் நேற்று கடைமடைக்கு தண்ணீர் வந்தது.
தண்ணீர் வந்த முதல் நாளே புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட எல்லை கிராமமான வேம்பங்குடி அருகே பெரிய உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வயல்வெளியில் பாய்கிறது. சுமார் 10 மீட்டர் அளவுக்கு உடைந்து பாய்ந்தோடுகிறது. இதனைப் பார்த்த விவசாயிகள் தடுப்பு கம்புகள் அமைத்து மணல் வைத்து அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரையை பலப்படுத்துங்கள் என்று விவசாயகள் கோரிக்கை வைத்த போதும் கண்டுகொள்ளாததே வாய்க்கால் உடைப்புக்கு காரணம் என்கிறார்கள் விவசாயிகள். கடந்த வருடம் தஞ்சையில் சில இடங்களில் இதே போன்ற நிகழ்வுகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.