கடந்த 12ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மேட்டூரில் இருந்து குறுவை சாகுபடிக்கான தண்ணீரை திறந்துவைத்தார். நேற்று முன்தினம் (14.06.2021) இரவு 11 மணியளவில் தண்ணீர் முக்கொம்பூர் அணையை வந்து சேர்ந்தது. வினாடிக்கு 892 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு, சுமார் 10 ஆயிரம் கன அடி தண்ணீர்வந்து சேர்ந்தது.
இந்நிலையில் இன்று (16/6/2021) காலை 9:15 மணியளவில் தமிழ்நாடு அமைச்சர்களால் கல்லணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது. கல்லணை திறக்கப்பட்ட நிலையில் வெண்ணாறு, கொள்ளிடம் உள்ளிட்ட இடங்களிலும் குறுவை சாகுபடி பாசனத்திற்கான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர், வேளாண்மைத் துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், அரசு கொறடா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.