கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சாலபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டில் இருந்த மாடுகளை ஓட்டிக்கொண்டு மேய்ப்பதற்கு காட்டுப்பகுதிக்கு சென்று இருந்தார். அப்போது அவரைப்போலவே மாடு மேய்ப்பதற்காக மாடுகளை ஓட்டி கொண்டு வந்துள்ளார், பக்கத்து ஊரான உ.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த மணிராஜ் என்ற 25 வயது வாலிபர்.
இவர் தனியாக மாடு மேய்த்துக் கொண்டிருந்த சாலப்பாக்கம் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பாட்டியிடம் சென்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமியின் உறவினர்கள் எலவாசனூர் கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விசாரணை செய்து போக்சோ சட்டத்தின் கீழ் மணி ராஜை கைது செய்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறையில் அடைத்துள்ளனர்.