Published on 19/08/2019 | Edited on 19/08/2019
சேலத்தில் புதிய அரசு சட்டக்கல்லூரியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்த கல்லூரியில் ஐந்து ஆண்டுகால சட்ட படிப்பிற்கு 80 இடங்களும், மூன்று ஆண்டுகால சட்ட படிப்பிற்கு 80 இடங்களும் நிரப்பப்பட உள்ளனர். இதனையடுத்து சேலம் அரசு சட்டக்கல்லூரின் அலுவலராக கோவை அரசு சட்டக்கல்லூரின் முதல்வர் கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து புதிய சட்டக்கல்லூரி மாணவர்கள் 15 பேருக்கு ஒதுக்கீடு ஆணையை முதல்வர் வழங்கினார். சேலத்தில் திறக்கப்பட்ட சட்டக்கல்லூரியின் மூலம் தமிழகத்தில் அரசு சட்டக்கல்லூரிகளின் எண்ணிக்கை 14 உயர்ந்துள்ளது. இந்த விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.