Skip to main content

வைகை ஆற்றில் நாளை எழுந்தருளவிருக்கிறார் கள்ளழகர்

Published on 29/04/2018 | Edited on 29/04/2018

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு அழகர் கோவிலிலிருந்து கள்ளர் வேடம் தரித்து அழகர் பல்லக்கில் புறப்பட்டார். வரும் வழியில் ஒவ்வொரு மண்டகமாக சென்று அருள்பாளித்தார். இன்று காலை மதுரை சுந்தரராஜான்பட்டி ஆகிய பகுதிக்கு மண்டகபடிகளிலில் வந்த கள்ளழகருக்கு நெய் வேத்தியங்கள், பட்டு பரிவட்டங்கள் சாத்தப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு எதிர் சேவை செய்து வழிபட்டனர். அப்போது கோவிந்தா  என பக்தி பரவசத்தில் பக்தர்கள் முழக்கமிட்டனர்.


 

madurai



மேலும் நாளை காலை தங்க குதிரையில் புறப்படும் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளயிருக்கிறார். வைகையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களிலிருந்து 5000 மேற்பட்ட போலீஸ்சார் குவிக்கப்பட்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்