Skip to main content

கலைஞர் தேசத்தின் தலைவர்: நிதின் கட்கரி

Published on 30/08/2018 | Edited on 30/08/2018
nitin gadkari


கலைஞரின் புகழுக்கு வணக்கம் என்ற தலைப்பில் சென்னையில் வியாழக்கிழமை மாலை நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. 
 

இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 
 

நெருக்கடி நிலையை துணிந்து எதிர்த்தவர் கலைஞர். நெருக்கடி நிலையின்போது ஜனநாயகத்தை காப்பதில் இந்திய அளவில் பங்களிப்பை வழங்கியவர். நெருக்கடி நிலையை பாஜகவும், கலைஞரும்தான் முதலில் எதிர்த்தோம். நெருக்கடி நிலையை எதிர்த்ததால் கலைஞரும், திமுகவினரும் கொடுமைப்படுத்தப்பட்டனர். பாஜகவுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர் கலைஞர். திமுக கொள்கைக்கு மாறான கட்சிகளுடனும் நட்பு கொண்டிருந்தார். மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைப்பதில் கலைஞர் முன்னோடியாக திகழ்ந்தார். 
 

 

 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்ட வரலாறு கலைஞருக்கு உள்ளது. நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் உழைக்கக்கூடிய கடும் உழைப்பாளியாக திகழ்ந்தார். கலைஞரை ஒரு மாநில தலைவராக மட்டும் கருதுவது சரியாக இருக்காது. கலைஞர் தேசத்தின் தலைவர். கலைஞர் சிறந்த தோழமைக் கட்சி தலைவர். 1999ம ஆண்டு அமைந்த வாஜ்பாய் தலைமையிலான மத்திய ஆட்சியில் சிறந்த தோழமை கட்சித் தலைவராக திகழ்ந்தார் கலைஞர். கலைஞருடன் இணைந்து டெசோ மாநாட்டில் 1986ம் ஆண்டு மதுரையில் வாஜ்பாய் பங்கேற்றார். இவ்வாறு கூறினார். 
 

 

சார்ந்த செய்திகள்