கலைஞருக்கு தமிழக அரசு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கலைஞரின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட கலைஞர் குடும்பத்தினர் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். தமிழக அரசிடம் இருந்து சாதகமான பதில் வராததால் திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞருக்கு தமிழக அரசு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் தமிழக அரசு அரசியல் செய்ய கூடாது என்று தெரிவித்துள்ளார். கலைஞரின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்