பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா திரைப்படம் நேற்று வெளியானது. வழக்கமான ரஜினி படங்களுக்கு உண்டான வரவேற்பை காலா பெறவில்லை என்றும் காலா திரைப்படத்தின் வசூல் மிக குறைவாக உள்ளதாக பெரும்பாலானோர் கூறி வரும் நிலையில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரஜினிகாந்தின் காலா ரூ.50 கோடி வசூல் செய்துள்ளது.
நடிகர் விஜய்யின் மெர்சல் படம் தான் கடைசியாக பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்த படம் என கூறலாம். அதைத்தொடர்ந்து தற்போது ரஜினிகாந்தின் காலா படத்திற்கும் அதே போலவே வரவேற்பு கிடைத்து வருகிறது.
சென்னையில் மட்டும் முதல் நாளில் காலா திரைப்படம் ரூ.1.76 கோடி வசூலித்துள்ளது. இது மெர்சல் வசூலான ரூ.1.52 கோடி ரூபாயை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தயாரிப்பாளர் தரப்பில் கூறும்போது,
தமிழ்நாட்டில் ரூ.17 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.7 கோடி, கேரளாவில் ரூ.3 கோடி மற்றும் இந்தியாவில் ரூ.6 கோடி என்றும் வெளிநாட்டிலிருந்து ரூ.17 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இது உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.