Published on 25/09/2018 | Edited on 25/09/2018

கருணாஸை கைது செய்தது தவறல்ல. எச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கும் இது பொருந்தும் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
சண்டகோழி-2 படத்துக்காக செய்தியாளர்களை சந்தித்தார் விஷால். அப்போது அவரிடம் கருணாஸ் கைது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, நடிகர் கருணாஸை போலீசார் கைது செய்துள்ளனர். பேச்சு சுதந்திரம் ஒரு எல்லைக்குள்தான் இருக்க வேண்டும். கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அந்த எல்லையை அவர் தாண்டியதால்தான் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து உள்ளார்கள் என்ற ரீதியில்தான் நான் இதனை பார்க்கிறேன்.
கருணாஸை கைது செய்தது தவறல்ல. எச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோருக்கும் இது பொருந்தும். நான் எல்லை தாண்டி தரக்குறைவாக பேசினால் கூட என்னை கைது செய்யாவிட்டால் நிங்கள் கண்டிப்பாக கேட்பீர்கள் என்றார்.