2019-20 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் சட்டசபையில் நடந்து வருகிறது. இரண்டாம் நாள் விவாதமான இன்று மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த நாகப்பட்டினம் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி சட்டசபையில், ''டிக் டாக்'' எனப்படும் செயலியால் மாணவர்கள், பெண்கள் சீரழிந்து வருகின்றனர். மேலும் இந்த செயலியால் உருவாகும் வீடியோக்கள் பல வன்முறையை தூண்டிவிடுகிற, சமுதாய சீர்கேட்டை ஏற்படுத்துகிற ஒன்றாகவும். வெளியாகும் வீடியோக்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டும் வருகிறது எனவே அரசு இந்த டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், இதேபோல் இதற்கு முன் ப்ளுவேல் என்ற உயிரை கொல்லும் விளையாட்டானது தடை செய்யப்பட்டது. அந்த ப்ளுவேல் கேம் தொடர்பான சர்வர் அமெரிக்காவில் இருந்தது. அங்கு தொடர்புகொள்ளப்பட்டு அந்த கேம் தடை செய்யப்பட்டது. அதேபோல் இந்த டிக் டாக் ஆப்பின் தலைமை இடம் எங்கிருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டு அந்த ஆப்பிற்கு விரைவில் தமிழகத்தில் தடை விதிக்கப்படும் என கூறியுள்ளார்.