Skip to main content

காக்கிக்குள் ஈரம்!

Published on 23/09/2017 | Edited on 23/09/2017
காக்கிக்குள் ஈரம்!



வாய் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த செந்தில் என்பவருக்கு மருத்துவமனை சிகிச்சை மறுக்கப்பட்ட நிலையில், அவரது உறவினர்களும் அவரை பார்த்துக்கொள்ள முடியாமல் கைவிட்டனர். இதையடுத்து ஆதரவின்றி சுற்றி திறிந்த செந்தில் மீது துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வடபழனி ஆய்வாளர் சந்துரு, வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செந்திலை அழைத்து வந்து மதுரவாயலில் உள்ள தனியார் தொண்டு மருத்துவமனையில் சேர்த்து, உரிய சிகிச்சை பெற உதவியது பொது மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

- அரவிந்த் 

சார்ந்த செய்திகள்