Skip to main content

சனாதன எதிர்ப்பு மாநாடு அரசியலுக்காக மட்டுமல்ல, அடுத்த தலைமுறையை மாற்றும் போர் பட்டாளம் - கி.வீரமணி

Published on 24/01/2019 | Edited on 24/01/2019

 

 

v


தேசம் காப்போம் என்கிற தலைப்பில் திருச்சி பொன்மலை ஜி கார்னர் இராணுவ மைதானத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில், 2014-ல் மோடி எந்த இடத்தில் பிரச்சாரத்தை துவக்கினாரோ அதே இடத்தில் மக்கள் அலையோடு திருமாவளவன் இந்த மாநாட்டை நடத்துவதாக குறிப்பிட்ட அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துணையாக திமுக தலைவர் ஸ்டாலின் இருப்பார். அதுவே திராவிடத்தின் அடிப்படை எனவும் கூறினார். 

 


ஜோதிபா பூலே, அம்பெத்கர், பெரியார் வழிகாட்டலில் இந்த மாநாடு தலைப்பு உள்ளது. அரசியல் போராட்டம் வெளியில் சனாதனம் vs ஜனநாயகம் போராட்டம் இது தான் தலைப்பு. ஆர்.எஸ்.எஸ் Vs தி.க, தி.மு.க வா என்பதை தலைப்பாக்கி இருக்கிறார்கள். சனாதன எதிர்ப்பு மாநாடு அரசியலுக்காக மட்டுமல்ல. அடுத்த தலைமுறையை மாற்றும் போர் பட்டாளம். சுத்தியலை எடுத்து பாசிச ஆட்சியை அடித்து நொறுக்குகிற சவப்பெட்டியின் மீது அடிக்கிற ஆணியை அறைகிற மாநாடு. சனாதானத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கத் தான் இந்த மாநாடு. காலம் காலமான குலத் தொழிலை பின்பற்றுவது தான் சனாதனம். மீறினால் தண்டிப்பது அதன் நோக்கம். அதனை எதிர்ப்பது இந்த மாநாடு. சனாதன சிந்தனை கரு அழிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்து நாடாக்க விரும்புவதை முறியடிக்க இந்த மாநாடு விரும்புவதாகத் தெரிவித்தார். சப்கா சாத் சப்கா விகாஸ் என ஏமாற்றினார் மோடி எனவும், இட ஒதுக்கீட்டை எதிர்த்து அனைத்து தரப்பினரும் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். போர் முழக்கம் தொடங்கி விட்டது, நீதிமன்றத்திலும் பார்போம், தேர்தல் மன்றத்திலும் பார்போம் என்று தனது உரையை முடித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்