திருப்பதி கோவிலில் இன்று அதிகாலை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும், தமிழக முதல்வர் பழனிச்சாமியும் சாமி தரிசம் செய்தனர். தரிசனத்திற்காக நேற்று இரவே சென்றிருந்த வெங்கையா நாயுடுவை பழனிச்சாமி சந்தித்து சால்வை போர்த்தினார். இந்த திடீர் சந்திப்பு பரப்பரப்பை ஏற்படுத்தியது. பின்னர் தரிசனம் செய்துவிட்டு பத்திரிகையளர்களை சந்தித்த பழனிச்சாமி, ”உலக நன்மைக்காகவும், மக்கள் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ பிராத்தனை மேற்கொண்டேன்” என்றார்.
அதேபோல, தரிசனத்தை முடித்துவிட்டு பேசிய துணை குடியரசுத் தலைவர், ”தமிழக முதல்வர் தம்மை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தார். மாவோயிஸ்டுகள் குறித்து கேள்வி கேட்டபோது, திருமலையில் இதுகுறித்து நான் பேசவிரும்பவில்லை என்றேன்” என்று தெரிவித்தார்.
மேலும், ”முக்கிய பிரமுகர்கள் யாரும் திருப்பதிக்கு வருடத்திற்கு பலமுறை வேண்டாம். வருடத்திற்கு ஒருமுறை வந்தாலே போதும். இப்படி பிரமுகர்கள் அடிக்கடி வருவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.” என்றும் தெரிவித்துள்ளார். அவ்வப்போது எழுமலையானை சந்தித்து பிரார்த்தனை மேற்கொள்வது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.