Skip to main content

ஜூலை 3 - நாடு தழுவிய போராட்டத்திற்கு அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல்!

Published on 29/06/2020 | Edited on 29/06/2020

 

Puducherry

 

ஜூலை 3 - அன்று  நாடு தழுவிய அளவிலான போராட்டத்திற்கு அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன. 

 

அதனையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் போராட்டம்  நடத்துவது சம்பந்தமான அனைத்து சங்க ஆலோசனைக் கூட்டம் முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யு.சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் AITUC, INTUC, CITU, AICCTU, LLF , AIUTUC, MLF, SIFTU, அரசு ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்களின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

இக்கூட்டத்தில் தொழிற்சாலைகளில் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல் டீசலுக்கு போடப்பட்ட கோவிட் வரியை ரத்து செய்திட வேண்டும், ஆட்டோ, சுற்றுலா வாகனம், மினி லோடு கேரியர், லாரி, பஸ், டெம்போ ஆகிய மோட்டார் வாகனங்களுக்கு FC, ரோடு Tax, இன்சூரன்ஸ் ஆகியவைகளை ஓராண்டுக்கு கட்டணம் இல்லாமல் புதுப்பித்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

 

அரசு சார்பு பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிய கூடிய பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளத்தில் 50% வழங்கிட வேண்டும், மின்சார கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி, குப்பை வரி, கடைகளில் லைசென்ஸ் புதுப்பித்துக் கொள்ளும் வரி போன்றவைகளை கரோனா ஊரடங்கு காலங்களில் வசூலிப்பதைக் கைவிட வேண்டும், கடன் கொடுத்த அரசு மற்றும் தனியார் வங்கிகள் கரோனா ஊரடங்கு முடியும் வரை கடனைக் கட்ட வலியுறுத்துவதை நிறுத்த வேண்டும். கரோனா காலங்களுக்கு வட்டியைத் தள்ளுபடி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளி, கல்லூரிகளில் கல்வி கட்டணம், தேர்வு கட்டணம் வசூலிப்பதை  தடுத்திட வேண்டும்,

 

தொழிலாளர் சட்டங்களை முற்றாக நீக்குவது, நான்கு தொகுப்புகளாக குறுக்குவது, வேலை நேரத்தை 12 மணியாக அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை கைவிடல், கரோனா பெயரைச் சொல்லிக்கொண்டு பாதுகாப்பு தொழிற்சாலைகள், நிலக்கரி சுரங்கங்கள், விண்வெளி அறிவியல், அணு ஆற்றல், காப்பீடு, வங்கி, ரயில்வே உள்ளிட்டவற்றை தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும்,  மின்சார திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும், மூலாதார தொழில்களில் அந்நிய முதலீட்டை அனுமதிக்காது இந்திய இயற்கை வளங்களை அந்நியர்கள் கொள்ளை அடிக்க வழிவகுப்பதை நிறுத்த வேண்டும்,

 

வேலை நீக்கம், சம்பள வேட்டு, வேலை நேரத்தை அதிகரிக்கிற முயற்சிகளை நிறுத்த வேண்டும், அவுட்சோர்சிங் முறையைக் கைவிடல், நிரந்தர, கேஷ்வல், காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் அனைவருக்கும் பொது முடக்க காலத்திற்கு முழுச் சம்பளம் வழங்க வேண்டும், பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வுகளை நிறுத்துகிற, நிலுவைத் தொகைகளை மறுக்கிற நடவடிக்கையை ரத்து செய்தல், வருங்கால நிதி சந்தாவை 12%லிருந்து 10% ஆகக் குறைக்கக் கூடாது,  வட்டி தொகையைக் குறைக்கக் கூடாது,

 

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி ரயில் மற்றும் பேருந்து கட்டணம் வசூலிக்காமல் சொந்த ஊர் திரும்பியோர் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்தல், பொது முடக்கத்தால் வருமானம் இழந்த கட்டுமான தொழிலாளர்கள், உடல் உழைப்பு தொழிலாளர்கள், வருமான வரி செலுத்தும் அளவிற்கு வருவாய் ஈட்டாத குடும்பங்கள் அனைத்திற்கும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு, தலா ரூ.7,500 வீதம் ரூ.22,500 நிவாரணம் வழங்கல், பொது முடக்கம் முடிந்த உடனேயே அத்தனை தொழில்களும் உடனடியாக இயல்பு நிலைக்கு வராது என்பதால், வேலை இழந்து நிற்கும் 40 கோடி மக்களைக் காப்பாற்ற, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆறு மாதத்திற்குத் தேவைப்படும் அனைத்து உணவுப் பொருட்களையும் விலை இல்லாமல் வழங்குதல்,

 

கட்டுமானம், ஆட்டோ மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்கள், பதிவு செய்யத் தவறியவர்கள், புதுப்பிக்காதவர்கள், அனைவருக்கும் நிவாரண நிதி, ஓய்வூதியர்களுக்கும் நிவாரண நிதியும், பொருட்களும் வழங்குதல், உயிரை பணயம் வைத்துக் கிருமி தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு சரியான பாதுகாப்பு உடைகள் வழங்கல்,  ஒப்பந்தத் தொழிலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் சமமான சம்பளம் காப்பீடு ஆகியவற்றை உறுதி செய்தல்.

 

http://onelink.to/nknapp

 

மின்வாரியம், பால் வளம், போக்குவரத்து, வங்கி, அரசுப் பணியாளர், தூய்மைப் பணியாளர், ரயில்வே உள்ளிட்ட துறைகளில் பணியை மேற்கொள்ளும் போது கிருமி தொற்றினால் இறந்த நிரந்தர, கேஷ்வல், ஒப்பந்தத் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளிடம் வலியுறுத்தி ஜூலை 3-ஆம் தேதி புதுச்சேரி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் ஊரடங்கு சமூக இடைவெளியைப் பின்பற்றி கைகளில் கோரிக்கை பதாகை ஏந்தி போராட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்