Skip to main content

தம்பித்துரையை தோற்கடிக்க என்னிடம் சொன்னவர் ஜெயலலிதா - ரகசியத்தை வெளியிட்ட கரூர் சின்னசாமி!

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

 

கரூர் எம்.பி. தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி போட்டியிடுகிறார். அதற்கான செயல்வீரர்கள் கூட்டம் கரூரில் நடைபெற்றது. 

 

இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கரூர் தி.மு.க. சார்பில் சீட்டு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட கரூர் சின்னசாமி பேசும் போது,

 

அதிமுக வேட்பாளர் தம்பிதுரை முதன் முதலாக கரூர் எம்.பி. தொகுதியில் போட்டியிட கதையையும். அவரை தம்பித்துரையை தேர்தலில் தோற்கடிக்க ஜெயலலிதாவே என்னிடம் சொன்னார் என்கிற ரகசியத்தையும் சொல்லி கட்சியினர் எல்லோருக்கும் தம்பிதுரை யார் என்பதை வெளிச்சம் போட்டு காட்டினார். 

 

ஓவர் டூ கரூர் முன்னாள் எம்.பி. சின்னசாமி 

 

தம்பிதுரை முதன்முதலில் கிருஷ்ணகிரியில் தான் போட்டியிட்டு எம்பி ஆனார். 1989ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்பட்டது.

 

தமிழகத்தில் அதிமுக சார்பில் 10 தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் 30 தொகுதிகளில் போட்டியிடுவது என்று உறுதி செய்யப்பட்டு வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா. 

 

politics

கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த எனக்கு கரூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் தம்பிதுரைக்கு சீட்டு கொடுக்காமல் அந்த மாவட்ட செயலாளர் சேகருக்கு ஜெயலலிதா சீட்டு வழங்கினார்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த தம்பிதுரை மீண்டும் சீட்டு வாங்கிவிட வேண்டும் என்று டெல்லிக்கு சென்று ராஜீவ் காந்தியை சந்தித்தார். தனக்கு ஜெயலலிதா சீட் தரவில்லை எப்படியாவது நீங்கள் அவரிடம் பேசி கிருஷ்ணகிரியை பெற்றுத் தாருங்கள் என்று கோரிக்கை வைத்தார்.

 

ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் ராஜீவ்காந்தி தொடர்பு கொள்ள முயன்றார். அதேநேரத்தில் ராஜீவ் காந்தியை தம்பித்துரை சந்தித்தது ஜெயலலிதாவுக்கு தெரிந்தவுடன் கோபம் ஆகி ராஜீவ்காந்தியின் தொலைபேசியின் அழைப்பை தவிர்த்து பேசுவதையும் தவிர்க்க ஆரம்பித்தார். 

 

பின்னர் ராஜீவ் காந்தி மகாராஷ்டிராவைச் சேர்ந்த தினேஷ் என்பவர் மூலம் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டார். அப்போது ஜெயலலிதா ராஜீவ்காந்தியிடம் எங்களுக்கு கொடுத்த 10 இடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்துவிட்டோம் என்னால் தம்பிதுரைக்கு சீட்டு கொடுக்க முடியாது என கைவிரித்தார்.

 

 

உடனே ராஜீவ்காந்தி எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 30 தொகுதிகளில் ஒன்றை நான் தருகிறேன் நீங்கள் உங்கள் கட்சியின் சின்னத்தை மட்டும் அவருக்கு கொடுங்கள் என்றார் முதலில் அதற்கு மறுத்த ஜெயலலிதா பின்னர் ஒப்புக்கொண்டார் .
 

politics

 

தம்பிதுரையை கிருஷ்ணகிரி தொகுதி தான் வேண்டும் அடம்பிடித்தார். ஆனால் ஜெயலலிதா அந்த தொகுதியை தரமுடியாது என்று கூறி விட்டு கடைசியாக என்னை விட்டுத் தர சொல்லி கரூர் தொகுதியை தம்பித்துரைக்கு ஒதுக்கினார்.

 

இப்படித்தான் கரூர் தொகுதியில் தம்பிதுரைக்கு முதல் முறையாக போட்டியிட சீட் கிடைத்தது.

 

வேறுவழியில்லாமல் கரூர் தொகுதியை ஒதுக்கிய ஜெயலலிதா என்னை மீறி சீட்டு வாங்கி வந்த தம்பிதுரையை இந்தத் தேர்தலில் போட்டியிடுவார் ஆனால் வெற்றி பெறக் கூடாது என என்னிடம் கோபமாக கூறினார்.

 

தேர்தல் பிரச்சாரத்திற்கு திருச்சி வந்த ஜெயலலிதா கரூர் பிரச்சாரத்திற்கு வர முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். பின்னர் நானும் சில நிர்வாகிகளும் கேட்டுக்கொண்டதற்காக கரூர் வந்த அவர் மேடையில் ஏறி கரூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுப் போட வேண்டும் என்று சொல்லி தம்பித்துரை பெயரை கூட சொல்லாமல் மேடையிலிருந்து கீழே இறங்கிச் சென்றார்.

 

 

இது ரொம்ப பழைய கதைதான் ஆனாலும் இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் தனக்கு தேவை என்றால் சொந்த கட்சியை கூட கவலைப்படாமல் தம்பித்துரை எந்தக் குறுக்குவழியையும் நாடுவார் என்று பழைய கதை சொல்லி கட்சியினரை தம்பிதுரை யார் என்பதை அனுபவத்தின் மூலம் சொன்னார்.

 

 

 

சார்ந்த செய்திகள்