Skip to main content

கொள்கைகளை அவ்வப்போது மாற்றிக்கொள்பவர்கள் திமுகவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

Published on 26/06/2018 | Edited on 26/06/2018
jayakumar


கொள்கைகளை அவ்வப்போது மாற்றிக்கொள்பவர்கள் திமுகவினர். கதவுகளை மூடியவர்களே அதனை திறக்க கூறுகின்றனர் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று காலை சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

கொள்கைகளை அவ்வப்போது மாற்றிக்கொள்பவர்கள் திமுகவினர். முரண்பாட்டின் மொத்த சின்னம் திமுக தான், நேரத்திற்கும் காலத்திற்கும் தகுந்த மாதிரி தங்களை மாற்றிக் கொள்வதில் அவர்களை விட சிறந்தவர்களை பார்க்க முடியாது.

1995ஆம் ஆண்டு ஆளுநரை பற்றி சட்டப்பேரவையில் பேசிய போது, ஆளுநர் குறித்து பேசக்கூடாது என்று 1999ல் திமுக தான் முடிவு எடுத்தது. அன்று கதவை பூட்டி விட்டு இன்று மீண்டும் அவர்களே திறக்க வேண்டும் என்கின்றனர் இது எந்த வகையில் நியாயம்?.

தூய்மை இந்தியா திட்டத்தை விளம்பரப்படுத்தவே மாவட்டந்தோறும் ஆளுநர் செல்கிறார். ஆட்சி அதிகாரத்தில் அவர் தலையிடுவது இல்லை. ஆளுநர் தனது வேலையில் ஈடுபட்டுள்ளார், தமிழக அரசும் தனது வேலையில் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்