காணாமல் போன சர்டிபிகேட், சிறுவர்கள், வாகனம் போன்றவற்றை தேடிக் கண்டுபிடிக்க வழக்கமாக வாட்ஸ்அப்பில் செய்திகள் பகிரப்படும். இன்னும் ஒருபடி மேலே போய், குறிப்பிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இன்னாருக்கு, இன்னவகை ரத்தம் தேவைப்படுகிறது. எனவே ஓர் உயிரைக் காப்பாற்ற கண்டிப்பாக இதை ஷேர் செய்யுங்கள் ப்ளீஸ்.! என வேண்டுகோள் வைக்கப்படும்.
இப்போது, மீன்வளத்துறை அமைச்சரின் லட்டர் பேடில் அவரது கையெழுத்துடன் கூடிய ஒரு செய்தி வேகமாக வலைத் தளங்களில் பரவி வருகிறது. அதில், "புவி வெப்பமயமாதல் காரணமாக இன்னும் 10 ஆண்டுகளில் இப்போது இருக்கும் வெப்பத்தை விட 4 டிகிரி அதிகரிக்கும். இமயமலையில் உள்ள பனிச்சிகரங்கள் வேகமாக உருகிவருகிறது. எனவே எல்லோரும் அதிக மரங்களை நட்டு பராமரியுங்கள்.
குடிநீரை வீணாக்காதீர்கள், பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதையும், எரிப்பதையும் தவிருங்கள். இந்த செய்தியை அனைவருக்கும் பகிருங்கள். அது லட்சக்கணக்கானவர்களை சென்றடையும். ஏனெனில் புவி வெப்பமயமாதலை தடுக்க எல்லோரும் ஒன்று சேர வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.