ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி
செப்7-ல் ஓய்வூதியர்கள் மறியல் போராட்டம்
ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் (ஜாக்டோ-ஜியோ) நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வூதியர்கள் செப்டம்பர் 7-ஆம் தேதி நடத்தும் சாலைமறியல் போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து பெருந்திரளாகப் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் அரசு ஊழியர் சங்கத்தின் நிறுவனர் தோழர் எம்.ஆர்.ஆப்பன் நினைவுதினக் கூட்டம் புதுக்கோட்டையில் புதன்கிழமையன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வே.ஜெகன்நாதன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் என்.ராமச்சந்திரன் வரவேற்றார். தோழர் எம்.ஆர்.அப்பனின் நினைவுகளை மாவட்ட நிர்வாகிகள் இரா.சுப்பிரமணியன், பி.பிரபாகரன், இரா.ராஜேந்திரசிங், எஸ்.மத்தியாஸ், வட்ட நிர்வாகிகள் எஸ்.ராஜசேகர், எம்.ஜோஷி, முருகேசன், எழிலன் உள்ளிட்டோர் பகிர்ந்துகொண்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் எம்.கந்தசாமி நன்றி கூறினார்.
ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ-ஜியோ) வருகின்ற செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் முழு ஆதவைத் தெரிவித்துள்ளது. மேலும், ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செப்டம்பர் 7-ஆம் தேதி அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் சாலைமறியல் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்தை புதுக்கோட்டையில் திரளான ஓய்வூதியர்களைத் திரட்டி நடத்துவது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
- பகத்சிங்