Skip to main content

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2வது நாளாக ஜாக்டோ - ஜியோ காத்திருப்பு போராட்டம்!

Published on 14/09/2017 | Edited on 14/09/2017
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2வது நாளாக
ஜாக்டோ - ஜியோ காத்திருப்பு போராட்டம்!

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 8 வது ஊதிய குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிகைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 8 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவையில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர் இரவு முழுவதும் நடந்த இந்த காத்திருப்பு போராட்டம் இன்று 2வது நாளாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  ஜாக்டோ- ஜியோகூட்டமைப்பினர் இதற்காக அரசு ஊழியர்களால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு சமைக்கப்பட்டது.

மேலும் அரசு சத்துணவு ஊழியர்கள் அரை நிர்வாணத்தில் உடலில் நாமமிட்டு கையில் பாத்திரம் ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் போன்ற நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த காத்திருப்பு போராட்டம் தொடர்பாக ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூறும்போது தாங்கள் கடந்த 7 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாகவும் ஆனால் தமிழக அரசு இதனை கண்டுகொள்ள வில்லை எனவும் பெண்கள் உட்பட சுமார் 1000க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு அரசு தான் பொறுப்பு எனவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து நடைபெற்று வரும் காத்திருப்பு போரட்டத்தில்ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என1000க்கும் மேற்பட்ட மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.இதையடுத்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

- அருள்குமார்

சார்ந்த செய்திகள்