Skip to main content

ஜெ. நினைவு தினம்; மெரினா நோக்கி ஓபிஎஸ் பேரணி

Published on 05/12/2022 | Edited on 05/12/2022

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் அவரது நினைவிடம் உள்ள மெரினாவில் குவிந்து வருகின்றனர். தற்பொழுது ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி எனப் பிரிந்து கிடக்கும் நிலையில் தற்போது எடப்பாடி அணியைச் சேர்ந்தவர்கள் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதற்காக அனைவரும் கருப்புச் சட்டையில் வந்திருந்தனர். அதன் பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி உறுதிமொழி ஏற்றனர்.

 

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அணியின் சார்பில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் எழிலகத்திலிருந்து பேரணியாக ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பினர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரும் பேரணியாக வந்து அஞ்சலி செலுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்