வங்கிகள் 3562 சிறப்பு அதிகாரி வேலைக்கான
விண்ணப்பிக்கும் நேரம் இது!
விண்ணப்பிக்கும் நேரம் இது!
தற்போது எந்த துறையில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் அறிவிக்கப்படுகிறதோ இல்லையோ, வங்கிகளில் வேலைக்கான அறிவிப்புகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் துறையாக வங்கித்துறை மாறியுள்ளது இதற்கு வங்கிகள் தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியை சரியாக பயன்படுத்தி, வங்கிப் பயன்பாட்டை அதிகரித்தும் எளிதானதாக மாற்றம் செய்து வருவதே காரணம் என கூறலாம்.
வங்கிகள் துறைகளில் இருந்து வெளிவரும் அறிவிப்புகள் இன்றைய இளைஞர்களுக்கான அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது எனலாம். இதுபோன்ற அரிய வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும்.
அலகாபாத் வங்கி, கனரா வங்கி, இந்திய வங்கி, சிண்டிகேட் வங்கி, ஆந்திரா வங்கி, மத்திய வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, யூகோ பாங்க், பாங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் இந்தியா, தேனா வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஈசிஜிசி, பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி, விஜயா வங்கி, பாரதி மஹில வங்கி, ஐடிபிஐ வங்கி மற்றும் பிற வங்கிளுக்கான அல்லது நிதி நிறுவனங்களுக்கான ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை 'ஐ.பி.பி.எஸ்.,' (Institute of Banking Personnel Selection ) தேர்வாணையம் ஏற்றுள்ளது.
2011 ஆம் ஆண்டு முதல் 'கிளார்க்', 'புரபேஷனரி ஆபிசர்ஸ்', 'ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ்', கிராம வங்கிகளுக்கான 'உதவியாளர்' மற்றும் 'அதிகாரி' தேர்வுகளை நடத்தி வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2 லட்சம் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து அன்மையில் ஆறாவது முறையாக 2017 - 18ஆம் ஆண்டுக்கான 15,332 குரூப் "ஏ" அதிகாரி மற்றும் குரூப் "பி" அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பை ஐ.பி.பி.எஸ் வெளியிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து 3247 புரோபஷனரி அதிகாரி மற்றும் மேலாண்மைப் பயிற்சி பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு நாளை புதன்கிழமை (ஆகஸ்ட் 16) முதல் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 3247
பணி: Probationary Officer/ Management Trainee (PO/MT)
காலியிடங்கள் விவரம்:
1. UR : 1738
2. OBC : 961
3. SC : 578
4. ST : 285
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.08.2017 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் சலுகை கோருவோருக்கு சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் இரு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.600 செலுத்தவேண்டும். இதனை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க, கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 05.09.2017
ஆன்லைன் முதல் கட்ட எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2017 அக்டோபர் 07,08 மற்றும் 14, 15 தேதிகளில் நடைபெறும்.
ஆன்லைன் இரண்டாம் கட்ட எழுத்துத் தேர்வு(மெயின் தேர்வு) நடைபெறும் தேதி: 26.11.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ibps.in/wp-content/uploads/Detailed_Advt_CWE_PO_VII.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
- ஜெ.டி.ஆர்