தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (16.12.2019) மாலை 05.00 மணியளவில் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நாளை (17.12.2019) வேட்பு மனு மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனுவை திரும்ப பெற (19.12.2019) கடைசி நாளாகும். அதன் பின் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும். அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மேலும் தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த புகார்களை பெற 'புகார் மையம்' அமைக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி 1800-425-7072, 1800-425-7073, 1800-425-7074 என்ற எண்களில் பொது மக்கள் புகார் அளிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.