Skip to main content

நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது: ரஜினிகாந்த்

Published on 15/07/2018 | Edited on 15/07/2018


நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் வந்தால் நிச்சயம் நன்றாக இருக்கும். அதனால் நிறைய நேரம், பணம் மிச்சமாகும். அடிக்கடி தேர்தல் நடத்துவதால், எல்லா அரசியல்வாதிகளுக்கும் தேர்தலை சந்திப்பதிலே நேரம், காலம் வீணாகும்.

அதனால், சட்டமன்ற தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் வருவது வரவேற்கத்தக்கது. அனைத்து அரசியல் கட்சிகளும் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கு ஒத்துழைக்க வேண்டும், அந்த மசோதா நிறைவேற வழிவகுக்க வேண்டும்.

 

 

தமிழகத்தில் லோக்ஆயுக்தா சட்டம் கொண்டு வந்துள்ளதை வரவேற்கிறேன். சக்தி வாய்ந்த லோக் ஆயுக்தாவாக இயங்க வேண்டும். அதில் ஒய்வு பெற்ற நீதிபதிகளை நியமித்து அது நன்றாக இயங்கினால் நிச்சயம் நன்றாக இருக்கும்.

தமிழக அரசு குறித்து எல்லோரும் விமர்சனம் தான் செய்கிறார்கள். விமர்சனம் செய்வது ரொம்ப சுலபம். என்னை பொறுத்தவரையில் இன்னும் நன்றாக செயல்படலாம், பெரிய பெரிய திட்டங்களை செயல்படுத்தலாம். இன்னும் நல்லா செயல்படலாம் என்பது தான் என் கருத்து. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்