Skip to main content

“படிக்க கஷ்டமா இருக்கு...அதனாலதான் இந்த முடிவு” - கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை

Published on 13/11/2022 | Edited on 13/11/2022

 

"It is difficult to read; That's why this decision" after writing the letter, the student

 

“என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனக்கு படிக்க கஷ்டமா இருக்கு. அதனாலதான் நான் இந்த முடிவெடுத்தேன். என்ன மன்னிச்சிருங்க” என எழுதி வைத்துவிட்டு விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஜக்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகள் செல்வராணி. இவர் திருச்செந்தூர் அருகே உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் செல்வராணி அறையிலிருந்த மற்றொரு மாணவி அவரது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். 

 

கல்லூரி விடுதியில் தங்கி இருந்த அவர் இன்று காலை மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருச்செந்தூர் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வராணி தங்கியிருந்த அறையை சோதனை செய்த காவல்துறையினர் காகிதம் ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர். அதில் “என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனக்குப் படிக்க கஷ்டமா இருக்கு. அதனாலதான் நான் இந்த முடிவெடுத்தேன். என்ன மன்னிச்சிருங்க” என எழுதப்பட்டிருந்தது.

 

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

 


 

சார்ந்த செய்திகள்