லாக்டவுனின் 4ம் கட்ட ஊரடங்கின் நான்கு நாட்கள் கழிந்த நிலையில், நெல்லை, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் 13 நாட்களாக புதிதாக தொற்று அறவே காணப்படவில்லை. அடுத்த இரண்டு நாட்களில் மகாராஷ்ட்ரா, சென்னை, கேரளா உள்ளிட்ட வெளிமாவட்ட, மாநிலப் பகுதிகளிலிருந்து தென்மாவட்டம் திரும்புவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் பலருக்கு கரோனா பாஸிட்டிவ் ஆகி, சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை அவர்களால் மூன்று மடங்காக எகிறத் தொடங்கிவிட்டது. நூற்றுக்கணக்கானோர். அரசு முகாம் மற்றும் சொந்தப் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தென்காசி மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தின் ஆய்வுக் கூட்டத்தைக் கூட்டிய தென்மண்டல கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியான அடிஷனல் செகரட்டரி, கருணாகரன் மாவட்ட வருவாய் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளிடம் சில நிகழ்வுகளை வலியுறுத்தினர். மாவட்டக் கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் முன்னிலையில் நடந்த அந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய இயக்குனர் கருணாகரன்,
அமைப்பு சாரா தொழிலாளார்களுக்கான 2ம் கட்ட நிவாராணப் பொருட்கள், மற்றும் நிதி உதவியினை உடனே வழங்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் வீடு, மற்றும் அரசு மேற்பார்வை நிறுவனங்களில் தனிமைப் படுத்தப்பட்டவர்களை கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பைப் பலப்படுத்த வேண்டும். நோய் தொற்று கண்காணிப்பு சோதனைகள் முக்கியமாக நடத்தப்படுவது அவசியம். மேலும் இது குறித்த விஷயங்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது தான் பரவலைத் தடுக்கும் என்று பேசிய இயக்குனர் கருணாகரன் தொடர்ந்து ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டார்.
இதில் கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி மிகவும் வலியுறுத்தியது தனிமைப் படுத்தப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டது தான். ஏனெனில் அவர்கள் விஷயத்தில் கண்காணிப்பு தவறினால் விளைவு தொற்றுப் பரவலை மீண்டும் ஏற்படுத்திவிடும் என்ற எச்சரிக்கை வெளிப்பட்டது.