Skip to main content

ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு! 

Published on 05/06/2022 | Edited on 05/06/2022

 

IPS Tamil Nadu government orders transfer of officers

 

தமிழகத்தில் 44 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி, தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக தேன்மொழி, ஆயுதப்படை ஐ.ஜி.யாக கண்ணன், கோவை மாவட்ட காவல் ஆணையராக பாலகிருஷ்ணன், நெல்லை மாவட்ட காவல் ஆணையராக அவினாஷ் குமார், மதுரை மாவட்ட அமலாக்கப்பிரிவு காவல்துறை எஸ்.பி.யாக வருண்குமார், அண்ணா நகர் காவல்துறை துணை ஆணையராக விஜயகுமார், மத்திய மண்டல ஐ.ஜி.யாக சந்தோஷ்குமார், மதுரை (வடக்கு) காவல் துணை ஆணையராக மோகன்ராஜ், லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக முத்தரசு, தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்.பி.யாக ராமர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

 

அதேபோல், கரூர் மாவட்ட காவல்துறை எஸ்.பி.யாக சுந்தரவதனம், மதுரை மாவட்ட காவல்துறை எஸ்.பி.யாக சிவபிரசாத், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எஸ்.பி.யாக பாஸ்கரன், திருவாரூர் மாவட்ட காவல்துறை எஸ்.பி.யாக சுரேஷ்குமார், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை எஸ்.பி.யாக பகேர்லா செபாஸ் கல்யாண், திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை எஸ்.பி.யாக கார்த்திகேயன், ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை எஸ்.பி.யாக தங்கதுரை உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்