தமிழகம் முழுவதும் ஏர்செல் நிறுவன நெட்வொர்க் சேவை பெரும்பாலும் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல்களில் இன்கம்மிங், அவுட் கோயிங் வசதியும் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பல மாவட்டங்களில் பொது மக்கள் ஏர்செல் வாடிக்கையாளர்கள் அலுவலத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொது மக்களின் கேள்விகளை சமாளிக்க முடியாத உள்ளூர் ஏர்செல் நிறுவன அலுவலகங்கள் இன்று மூடப்பட்டு காணப்படுகிறது. பல வருடங்களாக ஏர்செல் நம்பரை பயன்படுத்தி வருவதால் ஏர்செல் நம்பரையே ஆதார், வங்கி, கேஸ் போன்ற பல சேவைகளுக்கு கொடுத்து உள்ளதால் மக்கள் செய்வது அறியாது திகைத்து நிற்கின்றனர்.
இந்நிலையில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்கள் எண்ணில் இருந்து ஒரேயொரு எஸ்எம்எஸ் அனுப்பி வேறு நிறுவன மொபைல் சேவைக்கு, அதே எண்ணை மாற்றி கொள்ளலாம். அதன்படி ஏர்செல் வாடிக்கையாளர்கள், தங்களது மொபைல் செட்டிங்கில், நெட்வொர்க் செட்டிங் சென்று (Manually) நெட்வொர்க் சர்ச் செய்ய வேண்டும். அதில் காண்பிக்கப்படும் நெட்வொர்க்கில் ஏர்டெல் 2ஜியை தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர், PORT என டைப் செய்து, அத்துடன் உங்கள் மொபைல் எண்ணையும் சேர்த்து டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். இதனால் மொபைல் போர்ட்டபிளிட்டி எண் உங்களுக்கு 24 மணி நேரத்தில் கிடைக்கும். அந்த எண் மூலம், நீங்கள் ஏர்டெல் மொபைல் சேவைக்கு எளிதில் மாறலாம். உங்கள் மொபைல் எண்ணும் மாறாது. அதே எண்ணில் ஏர்டெல் சேவையை பயண்படுத்தலாம்.
ஆனால், இந்த சேவையிலும் பல குறைபாடுகள் நிலவுகிறது. எஸ்எம்எஸ் செல்வதில்லை. மொபைல் போர்ட்டபிளிட்டி எண் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. எனினும் முயற்சி செய்து பாருங்கள்..