Skip to main content

வரும் ஜூலை 4 ஆம் தேதி முதலீட்டாளர் சந்திப்பு-அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!

Published on 01/07/2022 | Edited on 01/07/2022

 

mm

 

வரும் ஜூலை 4 ஆம் தேதி முதலீட்டாளர் சந்திப்பு நடைபெற இருப்பதாக தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

 

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ''தொழில் முதலீடுகளை ஈர்ப்பதோடு அரசு நின்றுவிடாமல் தொழில் நிறுவனங்களோடு கலந்துரையாடி பல்வேறு திட்டங்களை அவர்கள் நிறைவேற்றுவதற்கு உரிய முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்கிறோம். உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் அமைய இருக்கிறது. இந்த ஓராண்டில் மட்டும் பலதுறைகளில் முதலீடுகளை ஈர்த்துள்ளோம். செமி கண்டக்டர்கள், மின் வாகனங்கள், லித்தியம் அயர்ன் பேட்டரிகள்,  சூரிய ஒளி மின்னழுத்திகள், சோலார் போட்டோ வோல்டிக் உற்பத்தி ஆகியவை புதிய துறைகளாக உருவாகி வந்துள்ளது. இந்த துறைகளில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்வதற்கு பல்வேறு தொழில் நிறுவனங்கள் பெரும் ஆர்வத்தைக் காட்டிவருகிறார்கள். கடந்த ஓராண்டில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது'' என்றார்

 

 

 

சார்ந்த செய்திகள்