தமிழகத்தில் கடந்த ஒருமாதமாக நடைபெற்று வந்த உள்ளாட்சி தேரத்ல் பிரச்சாரம் நேற்று மாலையோடு நிறைவடைந்தது. அரசியல் கட்சியினர் ஒருவர் கடுமையாக விமர்சித்த நிலையில், சில இடங்களில் வேட்பாளர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. குறிப்பிட்ட சில இடங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்றது. வேட்பாளர்கள் தங்களுக்கு பிடித்த பல்வேறு வழிமுறைகளில் வித்தியாசமான முறைகளில் தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.
அந்த வகையில் கோவையில் ருமேனிய நாட்டை சேர்ந்த இளைஞர் ஸ்டெபுன் திமுகவுக்கு வாக்கு கேட்டு பேருந்து, பைக்கில் பிரச்சாரம் செய்த சம்பவம் நேற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. உலகில் இதை எங்கும் காண முடியாது. ஆகையால் நான் தனிப்பட்ட முறையில் திமுகவுக்கு ஆதரவு திரட்டுகிறேன் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் வீடியோ தொலைக்காட்சியில் வெளியானதும் குடியுரிமை அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். இந்நிலையில் இன்று காலை சென்னை சாஸ்திரி பவனுக்கு வந்த அவர், அதிகாரிகளிடம் இதுதொடர்பாக விளக்கம் அளித்தார். இதற்கிடையே அவரின் விசா ரத்து செய்யப்பட்டு அவர் மீண்டும் ருமேனியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.