மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் இன்று நாகா்கோவிலில் நடந்த பத்திாிகையாளா்கள் சந்திப்பில்.... நாடாளுமன்றத்தில் நேற்று (1-ம் தேதி) குடியரசு தலைவா் உரையில் காந்தி சொன்னதன் அடிப்படையில்தான் அவாின் கனவை நிறைவேற்றும் விதமாக குடியுாிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என்றாா். குடியரசு தலைவாின் இந்த கூற்று காந்தியை இரண்டாவது முறையாக படுகொலை செய்ததற்கு சமம்.
1955-ல் குடியுாிமை தொடா்பான பிரச்சினைக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் மற்ற மாநிலங்களுக்கு தேவையற்றது. உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் அஸ்ஸாமில் மட்டும் தான் அமல் படுத்தப்பட்டுள்ளது. திடீரென்று அரசு இந்த சட்டத்தை மற்ற மாநிலங்களில் கொண்டு வரும்போது தான் எதிா்க்கபடுகிறது. குடியுாிமை வழங்க மதத்தை ஒரு அளவுகோலாக வைக்ககூடிய புதிய ஷரத்தை ஆா்.எஸ்.எஸ், பாஜகவின் அஜெண்டாக கொண்டு வருகின்றனா்.
டிஎன்பிஎஸ்சி குருப்-2,4 தோ்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதின் தகவல்களை பாா்க்கும் போது மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியில் 15, 20 வருடமாக நடைபெற்ற வியாபம் எனும் மிகப்பொிய ஊழலை போன்றது தான் இந்த குருப் தோ்வு முறைகேடு. இதற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு குழந்தைகள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கு தேவையான அத்தியாவாசிய மருந்துகளின் விலைகளை கம்பெனிகள் தாறுமாறாக உயா்த்துவதை கட்டுப்படுத்த மருந்து விலை கட்டுப்பாடு சட்டம் இருந்தது. அந்த சட்டம் தேவையில்லை என கூறியுள்ளனா். இந்தியாவில் 50 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத திண்டாட்டம், 40 ஆண்டுகளில் இல்லாத மக்களின் வாங்கும் சக்தி குறைவு அதிகாித்துள்ளது என்றாா்.