Skip to main content

ரயில்வே சிக்னலை உடைக்க முயன்ற வாலிபரிடம் விசாரணை

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

Interrogation of the youth who tried to break the railway signal

 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில்வே நிலையத்தில் உள்ள ரயில்வே சிக்னலில் திடீரென அதிர்வு ஏற்பட்டது. இதனை அறிந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் சம்பவ இடத்தில் விரைந்து சென்று பார்த்தபோது, திருப்பத்தூர் நகர் பகுதியைச் சேர்ந்த கோகுல் (வயது 30) என்பவர் குடிபோதையில் ரயில்வே சிக்னலை உடைக்க முற்பட்டதாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் இந்த சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை டிவிஷன் செக்யூரிட்டி கமிஷனர் சவ்ரோகுமார், இரயில்வே இருப்புப் பாதை டிஎஸ்பி பெரியசாமி, திருப்பத்தூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சிக்னல் உடைப்பிற்கும் தனக்கும் சம்பந்தமில்லை. ரயில்வே தண்டவாளத்தில் சும்மாதான் அமர்ந்திருந்தேன் என கோகுல் ரயில்வே போலீசாரிடம் தெரிவித்து வருவதாக குறிப்பிட்டனர்.

 

சிக்னல் கோளாறு காரணமாக ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டு ஏராளமானோர் பலியான நிலையில் திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்ட சம்பவம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் ரயில்வே நிலையத்தில் சிக்னல் உடைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்