மதநல்லிணக்க விழா எனும் சந்தனக்கூடு விழா
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்ஹா பாதுஷா நாயகத்தின் 856ம் ஆண்டு சந்தனக்கூடு எனும் மதநல்லிணக்க விழா நடைபெற்றது. இதில் முதல் நிகழ்ச்சியாக கடந்த ஜீலை 25ல் கொடியேற்றமும் அதை தொடர்ந்து நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை 5 மணியளவில் ஏர்வாடியிலிருந்து சந்தனக்கூடு நாட்டிய குதிரைகள், யானைகள், வானவேடிக்கையுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தர்ஹாவை மூன்று முறை வலம் வந்தபின் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் (சமாதி) சந்தனம் பூசப்பட்டது. இதில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை தர்ஹா ஹக்தார் நிர்வாக சபையினர் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி தேவதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
பாலாஜி