Skip to main content

ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் மீண்டும் பள்ளம் தோண்டும் பணி தீவிரம் 

Published on 26/10/2019 | Edited on 26/10/2019

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்  26 அடியில் உட்கார்ந்த நிலையில் இருக்க, முதலில் மூச்சுத்திணறல் ஏற்படாமல் சுவாசக்க போதுமான ஆக்ஸிஜன் கொடுக்கபட்டுவருகிறது. தற்பொழுது சுஜித் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் கிணற்றுக்குள் உள்ள குழந்தைக்கு ஒருபுறம் மன தைரியத்தை கொடுக்க அவரது உறவினர்களும் தாய், தந்தை ஆகியோரும் மருத்துவக் குழுவினரின் பரிந்துரையின் பேரில் முயற்சி எடுத்து வருகின்றனர்.

 

 The intensity of re-drilling work near the deep well

 

கிணற்றில் உள்ள குழந்தை சுஜித்திடம் தாயான கலாமெரி'' அம்மா நான் இருக்கிறேன் பயப்படாதே'' என்று கூற அந்த குழந்தை ''உம்''  என பதிலளித்துள்ளது. அதேபோல் தொடர்ந்து அந்த குழந்தையின் மாமாவும் உறவினர்களும் மேலே இருந்தவாறு அந்த குழந்தைக்கும் மன தைரியத்தைக் கொடுத்து வருகின்றனர்.மேலும் சுஜித்தை மீட்பதற்காக கோவையில் இருந்து மற்றொரு குழுவும் ஸ்ரீதர் என்பவரின் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில் குழந்தையின் ஒரு கைக்கு சுருக்குக் கயிறு மாட்டப்பட்ட நிலையில் மற்றொரு கையிக்கு சுருக்கு மாட்ட பலமுறை முயற்சி செய்தும் பலன் அளிக்காததால் மீண்டும் ஜேசிபி  இயந்திரங்களைக் கொண்டு பக்கவாட்டில் பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 5 ஜேசிபிகள் ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும் அதேபோல் கயிறு மூலம் குழந்தை மீட்கப்படுவதற்கான அந்த முயற்சியும் கைவிடப்படவில்லை அதுவும் மறுபுறம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

 

சார்ந்த செய்திகள்