தேசியக் கொடியை குப்பைத் தொட்டியில் போட்டு அவமதிப்பு
விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேசியக் கொடி கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டு அவமதித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் , விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த இந்திய தேசியக் கொடியை அலுவலர்கள் கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டுள்ளனர். கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த தேசியக் கொடிகளை அங்கு பணிபுரியும் அலுவலர்கள் கிழித்து அலுவலகம் முன்புள்ள குப்பைத் தொட்டியில் போட்டுள்ளனர். அரசு அலுவலர்களின் அலட்சியப்போக்கு மற்றும் பொறுப்பற்று தேசியக்கொடியை அவமதிக்கும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-சுந்தரபாண்டியன்