தமிழகத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. கடந்த முறை கடைசியாக நடைபெற்ற 2011 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் மாநகராட்சி மேயர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மேயர்களை மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அவரச சட்டத்தை கொண்டுவர தமிழக அமைச்சரவை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
1996 ஆம் ஆண்டு மேயர் தேர்தல் முதல்முறையாக நேரடி தேர்தலாக நடத்தப்பட்டது. அதன்பிறகு 2006 ஆண்டுவரை மறைமுக தேர்தலாக மாற்றப்பட்டது. அதன்பின் கடைசியாக நடந்த 2011 உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அரசு மேயர் தேர்தலை நேரடி தேர்தலாக அறிவித்தது. இந்நிலையில் தற்போது நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் 15 மாநகராட்சி மேயர்களை கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தலை நடத்த அமைச்சரவை முடிவெடுத்து அவரச சட்டம் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.