Published on 03/01/2019 | Edited on 03/01/2019

நாகை மாவட்டம் தரங்கம்பாடி நண்டலாறு சோதனை சாவடி அருகில் மர்மமான முறையில் ஒருபை கிடந்ததை பார்த்த சோதனை சாவடி காவலர்கள் பதட்டமாகி, கைப்பற்றிய பையை அருகில் உள்ள பொறையாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதனை பிரித்து பார்த்த காக்கிகள் மிகப்பெரிய ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியடைந்தனர் . அதில் 3075 கிராம் எடையுள்ள 27 தங்க பிஸ்கட்டுகள் இருந்தது கண்டுபிடித்தனர். முதற்கட்ட விசாரணையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அவ்வழியே வந்த கடத்தல்காரர்கள் போலிசாருக்கு பயந்து தூக்கி வீசியிருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் பொறையாறு போலிசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
