Published on 22/10/2023 | Edited on 22/10/2023
![Increase in age limit for teaching](http://image.nakkheeran.in/cdn/farfuture/jFsQ695gyNX1N2yPJDHxLJzsc6xdg-2GKr4YN4zEf1I/1697982216/sites/default/files/inline-images/ips_39.jpg)
ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுப் பிரிவினருக்கு 53 வயது என்றும், இதர பிரிவினருக்கு 58 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிந்திருந்த நிலையில், வயது வரம்பை தமிழக அரசு உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.