![tnaar](http://image.nakkheeran.in/cdn/farfuture/e5lXr-bsHR--VTtF0U0Te7b0vvwzajvH4_XvbVkqcPQ/1533347664/sites/default/files/inline-images/nagar_g.jpg)
சென்னையில் தி.நகர், சவுகார் பேட்டை உள்பட 23 இடங்களில் உள்ள தனியார் ஜவுளி கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
காந்தி பிரதர்ஸ் குரூப் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான கடைகள் மற்றும் உரிமையாளரின் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் இந்த சோதனை நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் பல்லாவரத்தில் உள்ள கவுதம் மற்றும் அவரது உறவினர்கள் வீடு மற்றும் 3 நகை கடைகளில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை வேப்பேரியில் டாக்டர் பிரகாஷ் சந்த் ஜெயின் என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.