வேலூர் மாவட்டம், திமிறியை அடுத்த கனியனூர் கிராமத்தை சேர்ந்தவர் 18 வயதான பெருமாள். அவர் காலைக்கடன் கழிப்பதற்காக அந்த கிராமத்தை ஓட்டியுள்ள குளத்தங்கரைக்கு அக்டோபர் 10ந்தேதி இரவு சென்றதாக கூறப்படுகிறது. அப்படி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் தேடியுள்ளனர்.
அப்போது அந்த குளத்து பக்கம்மிருந்து வந்தவர்கள் குளத்தில் யாரோ குதித்தது போல் இருந்தது எனச்சொல்லியுள்ளார்கள். இதில் அதிர்ச்சியாகி பலரும் குளத்தில் குதித்து தேடியும் எதுவும் சிக்கவில்லை.
அதன்பின்னர் தீயணைப்பு துறையினருகு தகவல் தெரிவித்தன் அடிப்படையில் திமிறியில் இருந்து வந்த தீயணைப்புத்துறையினர் குளத்துக்குள் இறங்கி தேடினர். 2 மணி நேர தேடலுக்கு பின்னர் பெருமாளின் உடலை கைப்பற்றினர்.
இது தொடர்பாக தரப்பட்ட வழக்கில் திமிறி காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்து மாற்றுதிறனாளியான அந்த இளைஞர் குளத்திற்கு செல்லும்போது தவறி விழுந்து இறந்தாரா? குதித்து தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது யாராவது குளத்தில் தள்ளி கொலை செய்தார்களா என்ன விவகாரம் என தீவிரமாக விசாணை நடத்தி வருகின்றனர். இது அக்கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.