
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் மாநில அரசின் வரி வருவாய் குறையும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று ஜிஎஸ்டி இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் மாநில அரசின் வரி வருவாய் குறையும். மாநில நலன் கருதி, பெட்ரோல், டீசல் மாநிலத்தின் வாட் வரியின் கீழ் இருப்பதே நல்லது.
தேவைப்பட்டால் பெட்ரோல் டீசலின் மத்திய கலால் வரியை குறைக்கலாம். தமிழக அரசு அழுத்தம் கொடுத்ததாலேயே பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் வரவில்லை. ஜிஎஸ்டியால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என அவர் கூறினார்.