தேர்வு எழுதும்போது மாணவர்கள் மதிப்பெண் பணத்திற்காக போடப்பட்டது என்ற பிரச்சனை பெரியதாகிய நிலையில் தற்போது மாணவர்கள் சிரமப்படாமல் இருக்க சென்ற ஆண்டு வினாத்தாளையே இந்தாண்டு கொடுத்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.
அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் தமிழக முழுவதும் உள்ள 538 உறுப்பு கல்லூரிகளில் நடைபெற்ற ஏழாவது செமஸ்ட்டர் இ.சி பேப்பர் (electronice and communication engineering) 2.11.18 அன்று நடைபெற்றது. இந்த தேர்வில் சென்ற ஆண்டு நவம்பர், டிசம்பர் கொடுத்த வினாத்தாளே மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் வினாத்தாளை தயார் செய்வார்கள். அப்படி தயார் செய்தால் அவர்களுக்கு அதற்கான பணம் வழங்கப்படும். இப்படி செய்யாமல் எந்த விதமான பணியையும் மேற்கொள்ளாமல் தேர்வாணையம் சென்ற ஆண்டு கொடுக்கப்பட்ட வினாத்தாளையே |இந்தாண்டும் கொடுத்துள்ளது.
வினாத்தாளை தயாரிக்கும் தேர்வாணயம் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருக்கும் வெங்கடேசன் அவர்களே இதற்கு முழுகாரணம் என்கிறார்கள் அங்குள்ள அதிகாரிகள்.
இதன் தொடர்பாக நடவடிக்கை பாயுமா என்ற கேள்விக்கு முன்பு தேர்வுக்கு தேர்ச்சிபெற பணம் வாங்கிய பிரச்சனையைப் போலவே தற்போதும் மேலிடத்தில் இருக்கும் அதிகாரிகள் செய்யும் தவறுகளுக்கு வெளியில் வந்தால் கீழ் உள்ள அதிகாரிகளை தண்டிக்கப்படும் நிலையில் தற்போது எந்த அதிகாரியை வெட்டப்போகிறார்களோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
தொடர்ந்து அண்ணா பல்கலைகழகத்தில் பல பிரச்சனை வந்துக்கொண்டு இருக்கம் பட்சத்தில் தற்போது இந்த பிரச்சனை இன்னும் சர்ச்சைக் குள்ளாகியுள்ளது.