குடும்ப வறுமையால் மீன்பிடிக்கச் சென்ற 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் கன்னியாகுமரியில் நிகழ்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் உயர் தெருவைச் சேர்ந்தவர் சகாய பிரான்சிஸ். மீனவராக இருந்த இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் நான்கு மகன்கள் இருந்தனர். காலப்போக்கில் உடல்நலக்குறைவு காரணமாக சகாய பிரான்சிஸ் மற்றும் அவரது மனைவியும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டது. குடும்பமே வருமானமின்றி தவிர்த்து வந்ததால் 15 வயதான ரோகித்தோனி மீன்பிடி தொழிலுக்குச் சென்றுள்ளார். இதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பம் வாழ்ந்து வந்தது.
இந்நிலையில் ரோகித் தோனி அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து விசைப்படகில் மீன்பிடிக்க சென்றுள்ளார். முட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சென்ற விசைப்படகு 12 நாட்டிக்கல் மைலில் சென்று கொண்டிருந்தபோது, மீன் பிடிப்பதற்காக ரோகித்தோனி வலையை வீசியுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கடலில் தவறி விழுந்த நிலையில், உடன் வந்த தொழிலாளர்கள் சிறுவனின் உடலை தேடினர். ஆனால் இறுதிவரை ரோகித் தோனியை கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் சிறுவன் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் முட்டம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக குளைச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.