Skip to main content

"அ.தி.மு.க. ஆட்சியில் முறைகேடாக பணி நியமனம்"- அமைச்சர் நாசர் குற்றச்சாட்டு!

Published on 08/01/2022 | Edited on 08/01/2022

 

"Improper employment in the AIADMK regime" - Minister Nasser accused!

 

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் ஆவின் பால் உற்பத்தி நிலையத்தை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர், இன்று (08/01/2022) நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பால் குளிரூட்டும் நிலையம், இனிப்பு வகைகள் தயாரிக்கும் இடங்களைப் பார்வையிட்டார். 

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நாசர், "ஆவின் நிர்வாக பணிக்கு வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதற்காவே தி.மு.க. அரசு, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யும் சட்டத்தை இயற்றியுள்ளது. பொங்கலுக்கு என ஆவின் விற்பனை இலக்கு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. பொங்கலுக்கு தமிழ்நாடு அரசு 126 கோடி ரூபாய்க்கு ஆவின் நெய் வாங்க உத்தரவிட்டுள்ளது. 

 

அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்தவரே ஒரு அ.தி.மு.க.காரர்தான். ராஜேந்திர பாலாஜி உப்பு தின்றவர் என்பதால் தண்ணீர் குடித்துள்ளார். சட்டம் தனது கடமை செய்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 734 பேர் ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு பொங்கலுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்" என்றார். 

 

இந்த ஆய்வின் போது, அமைச்சர் சு.முத்துசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் உடனிருந்தனர். 

 

சார்ந்த செய்திகள்