Published on 26/02/2018 | Edited on 26/02/2018
இலட்சக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் என நடிகை ஸ்ரீதேவி மறைவிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
நடிகை ஸ்ரீதேவி அவர்கள் துபாயில் திடீர் என மாரடைப்பால் காலமானார் என்கிற செய்தி கேட்டு பேர்அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவர்கள் திரையுலகில் சிறுவயது முதல் எத்தனையோ கதாப்பாத்திரத்தில் நடித்து இலட்சக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். அவரது இழப்பு திரையுலகிற்கு மிகப்பெரிய ஈடுசெய்யமுடியாத ஒரு இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.