கடந்த 29 -ம்தேதி திண்டுக்கல் மாவட்ட திராவிட கழகம் சார்பில் பெரியார் பிஞ்சுகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டு கூட்டத்துக்கு திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி மற்றும் நடிகர் சத்தியராஜ் ஆகியோர் வருகிறார் என்று தெரிந்தும் கூட போலீசார் முதலில் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் டென்ஷன் அடைந்த கருப்பு சட்டையினர் போராட்டத்தில் குதிக்கப்போகிறோம் என்று சொன்னதின் பேரில்தான் போலீசாரும் அனுமதி கொடுத்தனர். அப்படி இருந்தும் கூட ஆளும் கட்சி,எதிர்கட்சி கூட்டங்களை மிஞ்சும் அளவுக்கு அதிகமாகவே திராவிட கழகம் மற்றும் கூட்டணி கட்சியினருடன் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய நடிகர் சத்தியராஜ், நான் வில்லனாக திரைப்படத்துறைக்கு வந்து கதாநாயகனாக 100 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். தொடர்ந்து கதாநாயகனாக நடிக்கலாம் என்றால் அந்த சமயத்தில் திரைக்கு வந்த தம்பிகளான அஜித், விஜய்க்கு இணையாக நாம டான்ஸ் ஆட முடியாது என்பதால் குணச்சித்திர வேடத்திலையாவது நடிக்கலாம் என்றால் யூகோ பார்ப்பார்கள். 100 படத்தில் வேறு சம்பாதித்த பணமும் இருக்கு அப்ப நான் மட்டும் கடவுள் நம்பிக்கை கொண்டவன் என்றால் ஒரு ஜோசியரை பார்த்து இருப்பேன். அவர் என்ன சொல்வார் தனியாக ஒரு படம் எடு என்று சொல்லி இருப்பார்.
ஆனால் நான் பெரியார் கொள்கையுடன் வீரமணி புத்தகங்களையும் வாங்கி படித்ததால் நான் யூகோ பார்க்காமல் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்து 100 படங்களில் கதாநாயகனாக இருந்து சம்பாதித்ததை விட பலமடங்கு கூடுதலாகவே சம்பாதித்து நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். ஒருவேளை நான் ஜோசியரை பரர்த்து அவர் சொந்த படம் எடுக்க சொல்லி இருந்தால் இன்னைக்கு நான் ஒன்னும் இல்லாமல் போய் இருப்பேன். அதுநாள நீங்களே பகுத்தறிவை வளர்த்து முடிவு எடுத்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான். கடவுள் இல்லை என்று சொல்லும் எங்களையும் கடவுள்தான் படைத்தார் என்று எண் கணிதம் ஜோதிடமான தனது சினிமா துறையில் ஒன்று முதல் ஒன்பது தேதி வரை பிறந்த பிரபலங்கள் வளர்ந்ததை பற்றி குஷ்பு முதல் பிரபு வரை பட்டியல்யிட்டவர் அதே தேதியில் பிறந்து வீழ்ந்தவர்களை சொன்னால் விமர்சனம் ஆகிவிடும் ஆக எண் கணிதம் ஜோதிடத்தையும் நம்பாதீர்கள் என்று கூறி தனது பேச்சை முடித்தார்.
அதை தொடர்ந்து இறுதியாக மைக்கை பிடித்த கி.வீரமணி, 18 வயதுக்கு முன்னாடி திருமணம் செய்யக்கூடாது, ஒட்டுப் போடக்கூடாது என்று இருக்கு அப்படின்னா அவர்கள் பக்குவபடவில்லை என்று தானே அர்த்தம். அதன்பின் 18 வயதுக்கு மேல் சாதி, மதம், பார்க்காமல் எந்த முடிவாக இருந்தாலும் அவர்களே எடுத்து கொள்ளட்டும். அதை ஏன் பெற்றோர்கள் தடுக்கிறார்கள். ஆனால் குழந்தை திருமணம்,பாலியலை தடுக்கவேண்டும். இந்த மாநாடு வாயிலாக ஒன்றைமட்டும் பிரகடனப்படுத்த இருக்கிறேன் பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கவேண்டும் என்று கூறினார்.
அதை தொடர்ந்து மாநில அளவில் பேச்சு, கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ.மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். இந்த பெரியார் பிஞ்சுகள் மாநாட்டில் மாவட்ட திராவிட கழகத்தை சேர்ந்த பொறுப்பாளர்களும், தொண்டர்களும் பெரும்திரளாக கலந்துகொண்டனர்.